உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய்க்கடிக்கு மான்கள் பலி

நாய்க்கடிக்கு மான்கள் பலி

பேரையூர்: பேரையூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இரை தேடி இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் மான்கள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்த மான்கள் அவ்வப்போது ரோடுகளை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு பலியாகி விடுகிறது. தற்போது இப்பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த நாய்கள் மான்களை விரட்டிக் கடிக்கின்றன. 2 நாட்களுக்கு முன்பு சின்ன சிட்டுலொட்டிபட்டி பகுதிக்கு வந்த புள்ளி மானை நாய்கள் விரட்டி கடித்தன. மானை பொதுமக்கள் காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விளை நிலங்களுக்குள் இருக்கும் மானை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ