தள்ளி தள்ளி போகும் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ரூ.2.27 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் கடந்த மே மாதம் தொடங்கின. '60 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், 100 நாட்களை கடந்தும் பணிகள் நிறைவு பெறவில்லை. நகராட்சி அதிகாரிகளோ 'செப்., 15ல் திறக்கப்படும்' என்று சமாளித்தனர். இந்நிலையில் செப்.,25ல் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார். பஸ் ஸ்டாண்ட் பணிகள் காரணமாக திறப்பு விழாவும் தள்ளிப் போகிறது. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.