மேலும் செய்திகள்
எம்.பி.,க்களிடம் ஓய்வூதியர் மனு
15-Sep-2025
மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் பெரியதம்பி முன்னிலை வகித்து சங்க செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்ப்பித்தார். பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மனோகரன், அகில இந்திய ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க புரவலர் பார்த்தசாரதி, பேராசிரியர்கள் அனந்தகிருஷ்ணன், கிருஷ்ணன், டி.ராஜேந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உணவளித்தனர். கரூர் சம்பவம் போன்ற நிகழ்வுகள் இனி நடக்காதிருக்க, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதிய மதிப்புறு சட்டத்தை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
15-Sep-2025