உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுக்கடை அகற்ற கோரிக்கை

மதுக்கடை அகற்ற கோரிக்கை

புதுார்: மதுரை புதுார் கற்பகநகர் 6வது தெரு நுழைவு வாயிலில் மதுக்கடை உள்ளதால் அப்பகுதி குடியிருப்போர் சிரமத்திற்குள்ளாகின்றனர். கற்பக நகர் குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் கூறுகையில், ‘‘மதுக்கடைக்கு வருவோர் குறுகலான ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள்,சிறுவர்கள், முதியவர்கள் நடமாட முடியவில்லை. ரோட்டில் மது பாட்டில்களை வீசி செல்கின்றனர். கடையை அகற்றக்கோரி கலெக்டர், டாஸ்மாக் இயக்குனருக்கு மனு அளித்தும் பலனில்லை’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ