ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் தென்கால் கண்மாய் ரோடு விரிவாக்கத்தில் கரையில் இருந்த மண்ணை எடுத்து தமிழக அரசுக்கு விரயம் செய்த அதிகாரிகள், உடந்தையாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் மகாமுனி தலைமை வகித்தார். இந்திய கம்யூ மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் பேசினார். மாவட்ட செயலாளர் முத்துவேல், விவசாய சங்க செயலாளர் சந்தனம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.