உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பேரையூர்: பேரையூர் தாலுகா குடிசேரி ஊராட்சி செம்பட்டியை சேர்ந்த 100 நாள் வேலை பணியாளர்கள் நேற்று சேடப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.அவர்கள் கூறியதாவது: 100 நாள் வேலை செய்வதற்கு வாரம் ரூ.600 லஞ்சமாக ஊராட்சி நிர்வாகத்தினர் பெறுகின்றனர். தர மறுப்பவர்களுக்கு வேலை வழங்குவதில்லை. இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்றனர். ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ