உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆர்ப்பாட்டம்

இடமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆர்ப்பாட்டம்

மதுரை: 'தமிழகத்தில் கல்லுாரிக் கல்வி அலுவலர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்' என வலியுறுத்தி மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு கல்லுாரிக் கல்வித்துறை ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். தலைவர் பரந்தாமன் தீர்மானங்கள் குறித்து பேசினார். கல்லுாரிக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். இணை இயக்குநர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் பணியிடம் உருவாக்கி நிதியாளர் பதவிக்கு தகுதியானோரை நிரப்ப வேண்டும். 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ், செயலாளர் சந்திரபோஸ், மூட்டா பொருளாளர் செந்தாமரைக்கண்ணன் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை