உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிடும் அரசமைப்பு பிரிவு 16(4ஏ) நடைமுறைப்படுத்துதல், அனைத்து குரூப் 'டி' பணியிடங்களையும் மீண்டும் அரசுப் பணியாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அனைத்துத் துறை எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல பொறுப்பாளர் ராஜ்குமார் பேசுகையில், 'தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை பலனில்லை. 200 ரோஸ்டர் முறை ஒழிக்கப்பட்டு பணிமூப்புகளில் பின்தள்ளப்பட்டதால் பதவி இறக்கம், ஊதிய இழப்புகளால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருக்கும் பணியாளர்களுக்கு நீதி வழங்கிடும் வகையில் உரிய அரசாணை வெளியிட வேண்டும்' என்றார். மண்டல பொறுப்பாளர் கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரதேஷ், சிவக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை