ஆர்ப்பாட்டம்
மதுரை: பா.ஜ., ஹிந்து அமைப்புகளின் வழக்கறிஞர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., வழக்கறிஞர்கள் சங்க மாநில செயலாளர் மலையேந்திரன், துணைத் தலைவர் தாளைமுத்தரசு தலைமை வகித்தனர். நீதித்துறை, நிர்வாகத்துறையை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் அமைப்புகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தி பங்கேற்றனர்.