உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயலரை சந்தித்த வளர்ச்சி அலுவலர்கள்

செயலரை சந்தித்த வளர்ச்சி அலுவலர்கள்

மதுரை : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், ரங்கராஜ், மணிராஜ் ஆகியோர் கூடுதல் தலைமை செயலாளர் ரத்னாவை, ஊரக வாழ்வாதார இயக்க மேலாண் இயக்குனர் சஜீவனாவை சந்தித்து மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: தமிழக ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர், ஊராட்சி கூட்டமைப்பு கணக்காளர்கள் பணியாற்று கின்றனர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 2007 முதல் பணியாற்றும் இவர்கள் மகளிர் குழுவுக்கு கடன் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலிவுற்றோருக்கு உதவி வழங்கல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முதலமைச்சர் காலை உணவுத் திட்ட மைய பொறுப்பாளர்கள், துாய்மை காவலர்கள் போன்றோருக்கு ஊதியம் வழங்கல், பதிவேடுகள் பராமரித்தல் போன்ற பணிகளை செய்கின்றனர்.மகளிர் குழுக்களுக்கு வழங்கும் கடனுக்கு பெறும்வட்டியில் இருந்து மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதனையும் 7 ஆயிரம் கிராமங்களில் பணிபுரியும் கணக்காளர்கள் 6 மாதங்களாக பெறாமல் உள்ளனர்.இந்நிலையில் அரசின் நிதிவசதிக்கு ஏற்ப ரூ.1500, 2000, 2500, 3000, 3500 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போதாது என்பதால் மாதச்சம்பளமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுக்களை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ