வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பஞ்சபாண்டவர்கள் இங்கே ஏன் வந்தனர்?
மேலுார்: கீழவளவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச பாண்டவர் மலைக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். இம்மலை 2 முதல் 11ஆம் நுாற்றாண்டு வரை சமணர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. மலை மீது மூன்று, குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. பிராமிய கல்வெட்டுகள், கல் படிக்கட்டுகள், மலையடிவாரத்தில் விநாயகர், முருகன் கோயில்கள் உள்ளன. கீழவளவு சுற்றுவட்டார மக்கள் இங்கு திருமணம் உட்பட நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அப்பகுதி செந்தில்குமார் கூறியதாவது: மெயின் ரோட்டில் இருந்து மலைக்குச் செல்ல 370 மீ., துாரம் பாதை இல்லாமல் தனியார் பட்டா நிலம் வழியாக செல்கிறோம். அதனால் ரோடு அமைக்க முடியாமல் மேடு, பள்ளமாகவும் சேறும், சகதியுமாகவும் உள்ளது. இங்கு ஆராய்ச்சி நோக்கில் செல்லும் மாணவர்கள், வெளிநாட்டவர், விழா நடத்துவோர் மலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ரோடு அமைக்குமாறு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அளவீடு செய்ததோடு சரி ரோடு அமைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு ரோடு அமைக்க வேண்டும் என்றார்.
பஞ்சபாண்டவர்கள் இங்கே ஏன் வந்தனர்?