உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பூக்குழி இறங்கிய பக்தர்கள்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கோவில் குருவித்துறை வேட்டார்குளம் ஆதி மாசாணி அம்மன் கோயில் விழா பிப்.,9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்.,15ல் மயான பூஜை, நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இருந்து அம்மன் சக்தி கரகம் எடுத்து வருதல், கண் திறக்கும் விழா நடந்தது. நேற்று பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இன்று கொடியிறக்கம், முளைப்பாரி சக்தி கரகம் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கருப்புசாமி, மகா முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி