பால்குடம் எடுத்த பக்தர்கள்
மேலுார்: கூதப்பன்பட்டி காவேரி அம்மன் பங்குனித் திருவிழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் நா. கோயில்பட்டி காவேரி அம்மன் கோயிலில் இருந்து நேர்த்திக் கடனாக பால்குடம் எடுத்து, அலகு குத்தினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பலர் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.