உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்க்கரை நோயும், தவிர்க்கும் வழிமுறைகளும்

சர்க்கரை நோயும், தவிர்க்கும் வழிமுறைகளும்

உலகளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 2ம் இடம் வகிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கணக்கெடுப்பின்படி 11 சதவீத மக்களுக்கு சர்க்கரை நோயும், 15 சதவீத மக்களுக்கு சர்க்கரை நோய்க்கான முந்தைய நிலையும் உள்ளது.30 சதவீத சிறுநீரக செயலிழப்பிற்கு சர்க்கரை நோயே முக்கிய காரணம். இந்தியாவில் 12 சதவீத சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பிரச்னை உள்ளது. அதில் 4 சதவீத மக்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. காலின் கீழ் முனையை துண்டிக்கும் அறுவை சிகிச்சைக்கு சர்க்கரை நோய்தான்காரணம்.

தடுக்கும் வழிமுறை

தினமும் 45 நிமிடங்களுக்கு மிதமான நடை பயிற்சி அவசியம். துரித உணவுகள், கலோரி அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 5 சதவீத எடையை குறைக்க வேண்டும். 15 சதவீதம் வரை குறைத்தால் சர்க்கரை நோயிலிருந்து விடுபட அதிக வாய்ப்புள்ளது.சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒருவேளை கூட தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர் சிகிச்சை முறை அவசியம். ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும்அவசியம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவை சோதித்து, சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை நோயால் காலில் புண் வருவதை தவிர்க்க கால் நகங்களை அவ்வப்போது வெட்டிசுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரால் காலை தினமும் கழுவ வேண்டும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு காலில் உணர்ச்சி இருக்காது. அதனால் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க 'மைக்ரோ செல்லுலர் ரப்பர்' காலணிகளை அணிய வேண்டும்.- டாக்டர் ரகுராம்டாக்டர் விஜய் கணேஷ் மதுரை 84899 77765


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ