உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சிதிலமடைந்த அங்கன்வாடி

 சிதிலமடைந்த அங்கன்வாடி

கொட்டாம்பட்டி: பெரிய கற்பூரம் பட்டியில் 2018 ல் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. தற்போது இக்கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ளது. இம் மையத்தின் மேற்பகுதியில் மரங்கள் முளைத்துள்ளதால் ஏற்பட்ட வெடிப்பின் வழியாக வகுப்பறைக்குள் தண்ணீர் கசிகிறது. கட்டடத்தை சீரமைக்கும்படி கூறி பெற்றோர்கள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இருப்பினும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கட்டடம் உடைந்து விழுந்து விபரீதம் ஏற்படும் முன் சிதிலமடைந்த கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ