உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க.,வை வீழ்த்த தே.ஜ., கூட்டணி தான் மாற்று த.வெ.க., அல்ல என்கிறார் தினகரன்

தி.மு.க.,வை வீழ்த்த தே.ஜ., கூட்டணி தான் மாற்று த.வெ.க., அல்ல என்கிறார் தினகரன்

மதுரை : ''தி.மு.க.,வின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர தே.ஜ., கூட்டணியே மாற்று அணி'' என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கூறினார்.த.வெ.க., பொதுக்குழுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் விஜய், தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,க்கும்தான் போட்டி என குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மதுரையில் நேற்று தினகரன் கூறியதாவது:த.வெ.க., தலைவர் விஜய், அவரது ஆசையை சொல்லியுள்ளார். தி.மு.க.,வின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர தே.ஜ., கூட்டணி தான் மாற்று அணி. அதற்கு வலுசேர்க்கும் வகையில் தி.மு.க.,விற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.கட்சி துவங்கி 8 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க.,வில் ஏன் நாங்கள் இணைய வேண்டும். கூட்டணி பற்றி பேச இன்னும் காலம் உள்ளது. சுயநலத்தாலும், பதவி வெறியாலும், வழக்கு போட்டு விடுவார்களோ என்ற பயத்தாலும் தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற மறைமுகமாக உதவியவர்கள் யார் என்றும், தற்போது மறைந்து, ஒளிந்து டில்லி சென்றது யார் என்றும் அனைவருக்கும் தெரியும்.இதே நிலை நீடித்தால் 2026 தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்து, அதன் தொண்டர்கள், நிர்வாகிகள் ஓர் அணியில் ஒன்றிணைந்து தி.மு.க.,வை வீழ்த்த தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி