உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி: பாலம் சீரமைப்பு

தினமலர் செய்தி: பாலம் சீரமைப்பு

திருநகர் : தினமலர் செய்தி எதிரொலியாக திருநகர் காந்திஜி முதல் தெருவில் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.திருநகர் காந்திஜி முதல் தெருவில் நிலையூர் கால்வாய் மீதுள்ள தரைப்பாலத்தில் சிமென்ட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிந்தன. இவற்றின் நுனிப்பகுதி தரையில் இருந்து அரை அடி உயரத்தில் ஆபத்தான நிலையில் இருந்ததால் டூவீலர்கள்,நடந்து செல்வோர் பாதித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பால கம்பிகளை சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிட்டது. இச்செய்தியின் எதிரொலியாக தரைப்பாலம் நேற்று சீரமைக்கப்பட்டது. பொதுமக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ