தினமலர் செய்தி கிடைத்தது தீர்வு
மேலுார்: மேலுார் முத்தமிழ் நகரில் பாலம் கட்டிய 20 நாளில் விரிசல் ஏற்பட்டது. குறுக்கு தெருவில் உள்ள வீடுகளுக்கு செல்ல முடியாத வகையில் கழிவு நீர் கால்வாய் திறந்த நிலையில் காணப்பட்டது. அதனால் மக்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் அவலம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் ஏற்பாட்டின் பேரில் பாலம் உடனே சரி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.