உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் உரக்கடைகளில் ஆய்வு

தினமலர் செய்தியால் உரக்கடைகளில் ஆய்வு

மேலுார்; தினமலர் செய்தி எதிரொலியாக மேலுார் உரக்கடைகளில் தரக்கட்டுபாடு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மேலுாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படுகிறது. இதில் கலப்படம் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று தனியார் உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குநர் பரமேஸ்வரன் தலைமையில், ஆய்வாளர் செல்வகுமார் உள்பட பலர் ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் விலைபட்டியில் வைக்கவும், காலாவதியான பூச்சி மருத்துகள் விற்பனை செய்யக்கூடாது, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கடைகளில் உள்ள உர மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பினர். ஆய்வின் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை