உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி அதிகாரி ஆய்வு

தினமலர் செய்தி அதிகாரி ஆய்வு

மேலுார், : திருவாதவூர் பகுதியில் விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். சில தினங்களாக பெய்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி விதை நெல் அழுகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்பு குறித்து கணக்கீடு செய்தனர். பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை