உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துவங்கியது தினமலர் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ மதுரையில் ., தள்ளுபடியால் அதிர போகுது தமுக்கம்: 4 நாட்களும் ஜாலி ஷாப்பிங் தான்

துவங்கியது தினமலர் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ மதுரையில் ., தள்ளுபடியால் அதிர போகுது தமுக்கம்: 4 நாட்களும் ஜாலி ஷாப்பிங் தான்

மதுரை: தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2025 வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ், பில்டிங் அன்ட் ஆட்டோமொபைல் எக்ஸ்போ மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (ஆக.,29) ஆரவாரமாக துவங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர், சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை மாநகராட்சி கமிஷனர் சித்ரா திறந்து வைத்தார். விழாவில் தினமலர் வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, சத்யா பொது மேலாளர் வில்சன் ஆகியோர் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1m5ozomb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தென் மாவட்ட மக்களை 'ஷாப்பிங்'கால் திணறடிக்க போகும் இந்த தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, இன்று துவங்கி செப்., 1 வரை நடக்கும். இந்த நான்கு நாட்களும் தமுக்கம் மைதானம் 'ஷாப்பிங்'கால் களைகட்டப் போகிறது. மக்களை குஷிப்படுத்தும் வகையில் கண்காட்சியில் ஏராளமான ஆச்சரியங்கள், அதிசயங்கள், அரிய வகை பொருட்கள் இடம் பெறுகின்றன. குடும்பத்தோடு ஜாலியாக வாங்க, குதுாகலமாக ஷாப்பிங் செய்லாம். அனைவரும் விரும்பும் அனைத்து பொருட்களையும் நினைத்த விலையில் மனம்போல் அள்ளலாம். வாங்கும் பொருட்களுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். ரெடிமேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலை நயமிக்க டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், பாரம்பரிய சேலை ரகங்கள் என நீங்கள் விரும்பியதை மனம்போல் வாங்கலாம். பெண்களுக்கு அட்டகாசமான டிசைன்களில் மெகந்தியை இலவசமாக வரைந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கு ரெடிமேட் சர்ட், டிசர்ட், பேன்ட் உள்ளிட்ட ஆடைகள் அட்டகாசமான தள்ளுபடி விலைகளில் கிடைக்கும். ஜில் ஜில் ஸ்டால்கள் தமிழகத்தை சேர்ந்த ஸ்டால்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்தை சேர்ந்தவை என நுாற்றுக்கணக்கான 'ஏசி' ஸ்டால்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கடைகள் விரிந்து பரந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 10 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் விலை வரை உங்களுக்கு ஏற்ற பொருட்களை மனம் போல் அள்ளலாம். ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் போன், அலங்கார மின் விளக்குகள், எலக்ட்ரானிக்ஸ் அப்ளையன்சஸ், பெங்களூரு கிராப்ட் பர்னிச்சர்ஸ், ஸ்பேஸ் சேவிங் பர்னிச்சர்ஸ், யுனிக் ஹவுஸ் ஹோல்டு தயாரிப்புகள், ஜெய்ப்பூர் கார்மென்ட்ஸ், அனைத்து வகையான பொருட்களும் வாங்கலாம்.கோலாப்பூரி செப்பல்ஸ், மும்பை பேஷன் ஜூவல்லரிஸ், டில்லி புட்வேர், ராஜஸ்தான் மார்பிள்ஸ் அன்ட் மெட்டல் கிராப்ட்ஸ் என திணற திணற பொருட்களை வாங்கலாம்.

கார், வீடு வாங்கலாம்

ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில் ஒருபகுதியாக பில்டு எக்ஸ்போ மற்றும் ஆட்டோமொபைல் எக்ஸ்போ நடத்தப்படுகின்றன. ஒரே இடத்தில் பல விதமான புரமோட்டர்கள், முன்னணி கார் நிறுவனங்களின் தயாரிப்புகளை பார்வையிடலாம். சொந்தமாக வீடுகட்ட வேண்டும் என்ற உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேற அச்சாரம் போடலாம். பட்ஜெட்டுக்கு ஏற்ற எந்த பிராண்ட் கார்களையும் வாங்கலாம். ஷாப்பிங் செய்து சோர்ந்து விட்டால் என்ன செய்ய என கவலை வேண்டாம். புட்கோர்ட்க்குள் புகுந்து கமகமக்கும் வகை வகை உணவுகளை ஒரு கை பார்க்கலாம்.

போத்தீஸ் கேம் ஸோன்

குட்டீஸ்களை குஷிப்படுத்த போத்தீஸ் கேம் ஸோன் உள்ளது. பேட்டரி கார், வாட்டர் போட், சிக்குபுக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, பலுான் ஷூட்டிங் என பல பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளம் உள்ளன. குட்டீஸ்களை விளையாட வைத்து சந்தோஷப்படுத்தலாம். ஸ்டால்களில் குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்களும் வாங்கலாம். டூவீலர், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நுழைவு கட்டணம் ரூ.50 (6 வயதுக்கு மேல்). இன்று மட்டும் கண் காட்சி நேரம்: மதியம் 12:00 முதல் இரவு 9:00 மணி. டிக்கெட் கொடுக்கும் நேரம் மதியம் 12:00 முதல் இரவு 8:30 மணி வரை. கண்காட்சியை இன்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் திறந்து வைத்தார்.

இணைந்து கரம் சேர்ப்போர்

பவர்டு பை ஜி ஸ்கொயர். அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அன்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் பிராங் பேபர், ஆல்பா பர்னிச்சர்ஸ், சலானி ஜூவல்லரிஸ், கோவை லட்சுமி, ரேடியோ பார்ட்னர் மிர்ச்சி, ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி