| ADDED : ஜன 22, 2024 05:21 AM
மதுரை: மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கும், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா விமானம் மற்றும் தனியார் விமான நிறுவனம் சார்பில் மும்பை - மதுரைக்கும், மதுரை- மும்பைக்குமான சேவைகள் சென்னை வழியாக நடக்கிறது.இந்நிலையில் பிப். 22 முதல் மும்பை - -மதுரை - -மும்பை இடையேயான விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது. மும்பையில் இருந்து மதியம் 3:55 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 6:00 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக இரவு 7:25 மணிக்கு புறப்படும் விமானம் மும்பைக்கு இரவு 9:30 மணிக்கு சென்று சேரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.