பேரிடர்கால பாதுகாப்பு ஒத்திகை
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நடந்தது.திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள், பேரிடர் விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் வீரமணி, ஆர்.ஐ. விமலா தேவி, வி.ஏ.ஒ., சிவராமன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வ விநாயகம், அவனியாபுரம் போலீசார் பங்கேற்றனர்.* மேலுார் தாலுகா அலுவலகம் முன்பு பேரிடர்காலங்களில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் செந்தாமரை தலைமை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் பொன்னாண்டி சார்பில் பருவமழை காலங்களில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி செய்வது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.* திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் சங்கர், தாசில்தார் மனேஷ்குமார், துணை தாசில்தார்கள் கோபால்கிருஷ்ணன், செந்தில், முனுசாமி பங்கேற்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் நீச்சல், தற்காப்பு முறைகள் அறிந்த 51 செயல்பாட்டாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்தனர்.