உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்ட ஹாக்கி போட்டி

மாவட்ட ஹாக்கி போட்டி

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட பள்ளிகளுக்கான ஹாக்கி போட்டி வாடிப்பட்டி தாய் பள்ளியில் நடந்தது. ஆடவர் 14 வயது பிரிவு இறுதிப் போட்டியில் பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலைப் பள்ளி முதலிடம் பெற்றது. திருநகர் இந்திராகாந்தி பள்ளி 2, மகாத்மா பள்ளி 3, கப்பலுார் அரசு கள்ளர் பள்ளி 4ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் இந்திராகாந்தி பள்ளி முதலிடம், பாண்டியராஜபுரம் அரசு பள்ளி 2, வலையங்குளம் அரசுப் பள்ளி 3, திரு.வி.க. மாநகராட்சி பள்ளி 4ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் வாடிப்பட்டி அரசுப் பள்ளி முதலிடம், இந்திராகாந்தி பள்ளி 2, பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி பள்ளி 3, அவனியாபுரம் அரசுப் பள்ளி 4ம் இடம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை