உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பழமையான ஓடைப்பாலத்தில் பள்ளங்கள்

 பழமையான ஓடைப்பாலத்தில் பள்ளங்கள்

அலங்காநல்லுார்: குலமங்கலம் அருகே வாகைகுளத்தில் பழமையான ஓடை பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வாகைகுளம் - பனங்காடி ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள மயானம் அருகே பழமையான ஓடையில் பாலம் உள்ளது. ரோட்டோரத்தில் குடிநீர் குழாய் பதிக்க குழிதோண்டியதால் பழமையான ஓடைப்பாலம் மேலும் சேதமடைந்தது. ரோட்டை கடக்கும் 'மெகா சைஸ்' குழாய்கள் இடையே ஏற்படும் மண் அரிப்பால் பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதனால் விபத்துகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதி ராமமூர்த்தி கூறுகையில், ''தார் ரோட்டில் அடுத்தடுத்து உருவான பள்ளங்களில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படுகிறது. டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். பள்ளங்கள் இருப்பது குறித்து எச்சரிக்கும் விதமாக கற்கள், கட்டைகளை வைத்துள்ளனர். நெடுஞ்சாலை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை