தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., உண்ணாவிரதம்
மதுரை: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், அ.தி.மு.க., ஆட்சி திட்டங்களை மீண்டும் அமல்படுத்தவும் வலியுறுத்தி மதுரை நகரில் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடக்க உள்ளது. இதற்காக அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதல்வர் வெளிநாடு சென்றார் அது தோல்வி தான். இதுகுறித்து பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டார். ஆனால் அதை கொடுக்க மறுக்கிறார்கள். தொழில் துறை அமைச்சர் கூறிய அறிக்கையை வெள்ளை அறிக்கை என்று முதல்வர் கூறுகிறார். நாங்கள் தங்கத்தை கேட்கிறோம். ஆனால் அவர்கள் பித்தளையில் தங்கம் பூசுவது போல கூறுகிறார்கள் என்றார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், சதன் பிரபாகரன், மாணிக்கம், ஜெ., பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஜெரால்டு, இளங்கோவன், தமிழழகன் உட்பட பல கலந்து கொண்டனர்.