உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க.,--அ.தி.மு.க., ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே: ராமரவிக்குமார்

தி.மு.க.,--அ.தி.மு.க., ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே: ராமரவிக்குமார்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சையில் கருத்து சொல்லாத தி.மு.க., அ.தி.மு.க., இருகட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு, கோழி வெட்டுவோம் என்றும் போராட்டம் அறிவித்து பதற்றத்தை உருவாக்கி வருவோரை கண்டிக்கிறோம். அங்கு வழக்கத்தில் இல்லாத விஷயத்தை செய்ய அனுமதிக்க முடியாது. தங்களுக்கு வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. ஆனாலும் வழிபாட்டை நம்பும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வழிபாட்டு உரிமையை பெற்றுக் கொடுப்போம் என்று தி.மு.க., ஆதரவில் வென்ற ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, எம்.எல்.ஏ., அப்துல் சமது போன்றோர் மலையில் பிரியாணி சாப்பிட்டு தேவையற்ற சர்ச்சைக்கு வித்திடுகின்றனர்.சமண பள்ளி அடையாளங்களில் பச்சை பெயின்ட் அடித்து அவர்களுக்குச் சொந்தமானதாக காட்டிக்கொள்ள அடையாளம் உருவாக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இவ்வளவு பிரச்னைகள் உள்ளபோது, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்றி தீபம் ஏற்ற ஹிந்து சமய அறநிலையத்துறை எந்தவிதமான முன்னெடுப்பும் செய்யாதது கண்டனத்திற்குரியது.ஹிந்துக்களுக்கு ஆதரவாக கோயில் உரிமையை பாதுகாக்க தி.மு.க., அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராசன், சேகர்பாபு. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கருத்து சொல்லாமல் கடந்து செல்வது ஹிந்து விரோத தன்மையை உறுதி செய்கிறது. இவ்விஷயத்தில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை