தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
மதுரை: மதுரையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை குறித்த பாக முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் செயல்விளக்க கூட்டம் நாளை (ஜூன் 28) மதுரை கிழக்கு, மேலுார் தொகுதிகளிலும், ஜூன் 29ல் சோழவந்தான், மதுரை மேற்கு சட்டசபை தொகுதிகளிலும் நடக்கின்றன.இக்கூட்டங்களில் தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை, செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.