மேலும் செய்திகள்
தி.மு.க.,இளைஞரணி சார்பில் பயிற்சி முகாம்
14-Nov-2024
திருப்பரங்குன்றம்: தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் கோலப் போட்டிகள், நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும்விழா இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் விமல் சார்பில் நடந்தது. கோலப் போட்டியில் முதல் பரிசாக அரை பவுன் தோடு, 2ம் பரிசு கால் பவுன் தோடு, 3ம் பரிசு மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது. தவிர போட்டியில் பங்கேற்ற மகளிருக்கு காஸ் அடுப்பு, டி.வி., குக்கர், ஹாட் பாக்ஸ், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் சேர் வழங்கப்பட்டது. தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பாரகு, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா பரிசு வழங்கினர்.
14-Nov-2024