உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., வெளிநடப்பு

சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மொத்தம் 18 கவுன்சிலர்களில் அ.தி.மு.க., 4, தி.மு.க. 8 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கடந்த கூட்டத்தில் விவசாய பகுதி பிளாட்களுக்கு அனுமதி தர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நேற்று அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஸ்வரி, முத்துச்செல்வி, நிஷா உள்ளிட்ட 5 தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.கவுன்சிலர்கள் முத்துச்செல்வி, ஈஸ்வரி கூறியதாவது: வயல்வெளி, கிராமங்களுக்கு பாசன வாய்க்கால் குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதியில் பிளாட்டுக்கு அனுமதி தரக்கூடாது. தந்தால் கழிவு நீர் ஓடையாக மாறிவிடும். கூட்டத்திற்கு வராத கவுன்சிலர்களிடம் வீடு வீடாக சென்று அலுவலர்கள் கையெழுத்து வாங்குகின்றனர் என்றனர்.பேரூராட்சி தலைவர் ஜெயராமன்: ஐந்தில் 2பேர் மீண்டும் வந்துவிட்டனர். வேலைகள் அதிகம் செய்ய வலியுறுத்தினர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை