உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலுவலகத்தில் சான்று பெற்ற நல்லாசிரியர்கள் வாழ்த்தி அனுப்ப மனமில்லையா

அலுவலகத்தில் சான்று பெற்ற நல்லாசிரியர்கள் வாழ்த்தி அனுப்ப மனமில்லையா

மதுரை: மதுரையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள், சி.இ.ஓ.,வை சந்திக்க முடியாமல் அலுவலகத்தில் சான்று (ஆளறிச் சான்று) பெற்றுச் சென்றனர். மாவட்டத்தில் 13 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றனர். உயர், மேல்நிலையில் அரசு பள்ளிகளை சேர்ந்த ஒரு ஆசிரியர் கூட இடம் பெறவில்லை. அனைவரும் உதவிபெறும், மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர் விவரம் செப்.2ல் வெளியாகியும் பெயர் விவரத்தை கல்வித்துறை ரகசியமாகவே வைத்திருந்தது. வழக்கமாக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுவோர், சி.இ.ஓ.,வை சந்தித்து வாழ்த்து பெற்று சென்னையில் நடக்கும் ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்க சான்று பெற்றுச் செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு அந்தச் சான்றை சி.இ.ஓ., ரேணுகாவை அலுவலகத்தில் சந்திக்க முடியாததால், அலுவலர்களிடம் பெற்றுச் சென்றனர். விருது பெற்றோரை வாழ்த்த அதிகாரிகளுக்கு மனமில்லையோ என ஏமாற்றத்துடன் சென்னை சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை