ரேஷன் பொருட்கள் நவ.3,4ல் டோர் டெலிவரி
மதுரை: 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை வழங்கும் நவம்பருக்கான 'டோர் டெலிவரி' திட்டம் நவ. 3, 4ல் செயல்படுத்தப்பட உள்ளது. ஆகஸ்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் மதுரையில் 86ஆயிரத்து 500 பேர் கணக்கெடுக்கப்பட்டனர். மாதத்தில் 2 நாட்கள் முன்கூட்டியே தேதி குறிப்பிடப்பட்டு அந்த நாளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை ரேஷன் கடை விற்பனையாளர்கள் வழங்குகின்றனர். நவம்பர் மாதத்திற்கான 'டோர் டெலிவரி' நவ.3, 4 ல் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், அலைபேசி எண் மாற்ற வேண்டியிருந்தால் ரேஷன் தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் அல்லது ரேஷன் கடைகளில் தெரிவித்து தீர்வு காணலாம்.