உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்

சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்

சிறுநீரக நோயாளிகளுக்கு ‘பன்’ என்ற பரிசோதனை எதற்காகச் செய்யப்படுகிறது. -மாதவன், மதுரை ‘பிளட் யூரியா நைட்ரஜன்’ என்பதன் சுருக்கமே ‘பன்’ பரிசோதனை. இதில் நைட்ரஜன் என்ற கழிவுப்பொருள் உடலில் எப்படி வெளியேறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் பாதிப்பை மட்டுமல்லாமல் கல்லீரல் செயல்பாட்டினையும் சேர்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதன் இயல்பு அளவு 10 லிருந்து 20 மி.கி./டெ.லி.வரை. இதற்கு மேல் அளவுஅதிகரித்தால், சிறுநீரகப் பிரச்னை என்றும், அளவு குறைந்தால் கல்லீரலில் பிரச்னை என்றும் பொருள். சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அந்த சிகிச்சை பலன் தருகிறதா என்பதையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். சிறுநீரகப் பிரச்னைக்கு நீர் வறட்சி, இதயச் செயலிழப்பு போன்ற வேறு காரணங்கள் இருக்கக்கூடுமா என்பதையும் இது தெரிவிக்கிறது. – டாக்டர் கு. கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை