உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் குழாய் திருட்டு

குடிநீர் குழாய் திருட்டு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்க கருக்கட்டான்பட்டி, தேனி ரோட்டில் பழைய குப்பைக் கிடங்கு அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளன. தேனி ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் 10 அடி நீள குடிநீர் குழாய், அதில் இணைக்கப்பட்டிருந்த ‘கேட்வால்வ்’ ஆகியவற்றை இணைத்திருந்த போல்ட் மற்றும் நட்டுகளை, யாரோ சிலர் திருடிச் சென்றுள்ளனர். கருக்கட்டான்பட்டி குடிநீர் தொட்டியில் தண்ணீர் வெளியேறும் பகுதி குழாயை அறுத்து திருட முயன்றுள்ளனர். குழாயை ஒரு பக்கத்தில் அறுத்த நிலையில் மேல் பகுதியில் அறுக்க நேரமின்றி விட்டுச் சென்றுள்ளனர். இதனால் 2 தொட்டிகளிலும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ