உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன.19ல் குடிநீர் நிறுத்தம்

ஜன.19ல் குடிநீர் நிறுத்தம்

மதுரை, : பண்ணைப்பட்டி வைகை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலாவது குழாயினை முல்லைப் பெரியாறு குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணி நடக்கிறது. இரண்டு பிரதான குழாய்களை இணைக்க வைகையிலிருந்து கொண்டு வரப்படும் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஜன.,19ல் மதுரை வைகை தென்கரை பகுதிகளான வார்டு 41, 44, 45, 46, 47, 48, 49, 53, 71, 72, 74, 85ல் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ