கொடிமங்கலத்தில் உடையும் குழாயால் வீணாகும் குடிநீர்
வாடிப்பட்டி: துவரிமான் அருகே கொடிமங்கலத்தில் பதித்துள்ள குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படு வதால் பல் லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வைகை அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான குழாய்கள் மேலக்கால், கொடி மங்கலம், மேலமாத்துார், கீழமாத்துார் ரோட் டோரங்களில் செல்கிறது. இக்குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் அப்பகுதி தோப்புகள், காடுகள் மீண்டும் வைகை ஆற்றில் கலப்பது என வீணாகிறது. இந்நிலையில் கொடிமங்கலம் கீழத்தெரு மயானம் அருகே 3 மாதங் களாக குடிநீர் வெளியேறுகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சிறிய உடைப்பாக இருந்ததை சரி செய்ய வந்தவர்கள் குழி தோண்டினர். இதற்காக பெரிய புங்க மரத்தையும் அகற்றினர். ஆனால் உடைப்பு சரி செய்யப்படவில்லை. வெளியேறும் நீரின் அளவு தான் அதிகரித்துள்ளது. உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.