உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் டிரைவர் பலி ரூ.36.32 லட்சம் இழப்பீடு

விபத்தில் டிரைவர் பலி ரூ.36.32 லட்சம் இழப்பீடு

மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே துாதையைச் சேர்ந்தவர் டிப்பர் லாரி டிரைவர் சண்முகம் 40. இவர் 2019 அக்., 20 ல் திருப்புவனம் மருதமரம் அருகே மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை ரயில்வே பாலம் அருகே டூவீலரில் சென்றபோது கார் மோதி இறந்தார். அவர் இறப்புக்கு இழப்பீடு கோரி மதுரை 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கார் உரிமையாளர் பவானி, கார் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட மதுரை ஐ.சி.ஐ.சி.ஐ., லம்போர்டு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு எதிராக சண்முகத்தின் மனைவி சங்குமணி மற்றும் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். சங்குமணி சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுவாமிநாதன் ஆஜரானார். குடும்பத்தினருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., லம்போர்டு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ரூ.36லட்சத்து 32 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க நீதிபதி ஜோசப் ஜாய் உத்தர விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை