உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயர்நீதிமன்றத்தில் இ சேவை மையம்

உயர்நீதிமன்றத்தில் இ சேவை மையம்

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் இசேவை மையம் துவக்க விழா நடந்தது. நிர்வாக நீதிபதி ஜெ.நிஷா பானு துவக்கி வைத்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.விஜயகுமார், எஸ்.ஸ்ரீமதி, பி.வடமலை, ஆர்.சக்திவேல், ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன் பங்கேற்றனர்.இங்கு வழக்கறிஞர்கள் இபைலிங்(மின்னணு) முறையில் வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்தல், காணொலி வாயிலாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராதல், வழக்கின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வது, நீதிமன்ற உத்தரவு நகலை இமெயில், வாட்ஸ் ஆப்பில் அனுப்பும் வசதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !