உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்விக்கடன் முகாம்

கல்விக்கடன் முகாம்

மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் பொதுத்துறை, தனியார் வங்கிகள் பங்கேற்ற சிறப்பு கல்விக் கடன் முகாம் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை அறிவியல் மற்றும் பிற படிப்புகளுக்கு வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது தொடர்பாக ஆவணங்கள் வழிமுறைகள் விளக்கப்பட்டன.மாணவர்களுக்கான கல்விக் கடன் அனுமதி கடிதத்தை கலெக்டர் சங்கீதா வழங்கினார். டி.ஆர்.ஓ. சக்திவேல்,வெங்கடேசன் எம்.பி., முதுநிலை முதல்வர் சுரேஷ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் அனில் கலந்து கொண்டனர். வங்கிகள் சார்பில் ரூ.2 கோடி அளவில் கல்விக்கடன் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி