உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவிக்கு கல்வி உதவி

மாணவிக்கு கல்வி உதவி

மதுரை : டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கண்மணி. கணவர் இறந்துவிட்டதால் 3 மகள்கள், ஒரு மகனுடன் வறுமையில் தவித்தார். 3வது மகள் முத்துச்செல்வி மதுரை காமராஜ் பல்கலையில் பி.எஸ்சி., படிக்கிறார். கல்வி கட்டணம் செலுத்த வழியில்லாத நிலையில், கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டார அமைப்பு உதவ முன்வந்தது. அவருக்கான கட்டணம் ரூ.13 ஆயிரத்து 810ஐ தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜய பார்த்திபன், உறுப்பினர் சீர்காழி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ