உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவருக்கு கல்வி உதவி

மாணவருக்கு கல்வி உதவி

மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே கொல்லவீரம்பட்டி மகேஸ்வரி மகன் ஜோதிராகவ். ஒத்தக்கடை வேளாண் கல்லுாரியில் மூன்றாண்டுகளாக படித்து வருகிறார். அவரது குடும்பச் சூழலால் உயர்கல்வியை தொடர வழியின்றி தவித்தவருக்கு டி.கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டாரம் அமைப்பு மூன்று ஆண்டுகளாக கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. ஒவ்வொரு செமஸ்டரின் போதும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன் ஆகியோர் 7 வது செமஸ்டருக்கு ரூ.18 ஆயிரத்து 500 வழங்கியது மூலம், இதுவரை ரூ.1.13 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி