கார் விபத்தில் மூதாட்டி பலி
பேரையூர் : பேரையூர் கருணைஆனந்தம் நகர் ரஜித்ராய் 37. ஹெர்பல் கிளீனிக் நடத்தி வருகிறார். இவரது சகோதரர் சிமோளாராய் 37. இவர்களது தாயார் கண்ணன் ராய் 60. மேற்கு வங்காளத்தில் வசிக்கிறார். சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற திருச்சி வழியாக தாயாரை இருவரும் காரில் பேரையூருக்கு அழைத்து வந்தனர். டி. குன்னத்துார் அருகே குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டபோது கார் கவிழ்ந்தில் கண்ணன் ராய் இறந்தார்.