உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தடையில்லா மின்சாரம் மழைக்காலத்தில் வழங்க மின்வாரியம் முயற்சி

தடையில்லா மின்சாரம் மழைக்காலத்தில் வழங்க மின்வாரியம் முயற்சி

தென்மேற்கு பருவமழை துவங்கும் முன்பே மே முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டாலும், வடகிழக்கு பருவமழை நேரத்தில் கூடுதல் முன்னேற் பாடுகளை செய்துள்ளனர். அதிகாரிகள் குழுக்கள் மின்வாரியத்திற்கு தேவையான உப கரணங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்களை இருப்பு வைத்துள்ளதுடன், அதிகாரிகள் குழுக்களை உருவாக்கி 24 மணி நேர கண்காணிப்புடன் செயல்படுகின்றனர். மரம், பழுதான கம்பங்கள், மின்ஒயர்களால் பாதிக்கும் இடங்கள், புகார் வந்த பகுதிகளில் உடனுக்குடன் மாற்றி அமைத்துள்ளனர். மேற்பார்வை பொறி யாளர் பத்மாவதி உத் தரவின் பேரில் மாவட்ட அளவில் உள்ள மதுரை கிழக்கு, திருமங்கலம், சமயநல்லுார், உசிலம்பட்டி கோட்டங்களில் அதிகாரிகள் குழுக்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கோட்டத்திலும் உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் 2 குழுக்கள், ஒவ்வொரு குழு விலும் 15 ஊழியர்கள் செயல்படுகின்றனர். மின் பாதையையும் கண் காணித்து வருகின்றனர். சுறுசுறு செயல்பாடு இவ்வகையில் மாவட்ட அளவில் 6954 பகுதிகளில் மின்பாதைக்கு இடையூறான மரக்கிளைகளை வெட்டிச் சீரமைத்துள்ளனர். பழுதடைந்த 657 மின்கம்பங் களுக்கு பதில் புதிதாக மாற்றியுள்ளனர். 742 சாய்ந்த மின்கம்பங் களை சரிசெய்துள்ளனர். 861 பகுதிகளில் தாழ்வாக சென்ற மின்ஒயர்களை இழுத்துக் கட்டி சரி செய்துள்ளனர். தவிர மின்பாதையில் தொய்வான பகுதிகளில் 671 மின்கம்பங்களை கூடுதலாக நிறுத்தி மின் பாதையை சரிசெய்து உள்ளனர். மின்கம்பங்களில் 'ஸ்டே கம்பி'கள் எனப்படும் வகையில் 767 பகுதியில் இழுத்துக் கட்டி மின்கம்பங்களை பாது காத்துள்ளனர். பாதிப்புகள் ஏற் பட்டால் உடனே சரிசெய்யும் வகையில் 3257 மின்கம்பங்கள், 40க்கும் மேற்பட்ட டிரான்ஸ் பார்மர்களை இருப்பு வைத்து தயார் நிலையில் உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'மழை நேரத்தில் மக்கள் மிகுந்த எச் சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின்தடை, பழுதான மின்கம்பங்கள், மின்கம்பி அறுந்து விழுதல் குறித்து மின்னகம் எண் 94987 94987ல் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Varadarajan Nagarajan
அக் 28, 2025 21:48

மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏற்படாமல் செய்யுங்கள். உயிர் விலைமதிக்கத்தக்கது.


angbu ganesh
அக் 28, 2025 09:43

இன்னும் முயற்சிலதான் இருக்கீங்க 5 வருஷம் முடிய போகுது உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா மழை நீர் வடிகால் கதைதான் 5036 கோடி