உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்:திருமங்கலம் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுரேஷ்குமார் பேசுகையில், ''அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது 20 ஆயிரத்தற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவோம் என அறிவித்தது. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாருக்கு தாரை வார்க்க ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்'' என்றார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பையா, தங்கராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை