வேலைவாய்ப்பு முகாம்
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. 3 நிறுவனங்களுக்கு மொத்தம் 104 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் தாளாளர் கே.பி.எஸ்.கண்ணன் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசுகையில், ''கலை அறிவியல் கல்லுாரியில் ஒரே மாதத்தில் 104 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். கல்வி ஒன்றே மாணவர்களை உயர்த்தும்'' என்றார். செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், முதல்வர் ராஜூ, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்களை வாழ்த்தினர்.