உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை:தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவன மதுரை பிரிவிற்கு புதிய தலைவராக அழகுமுனி தேர்வானார்.மனித வள மேம்பாடு, பணியாளர் மேலாண்மை சார்ந்த பணிகளில் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.எம்.,) முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மதுரை பிரிவுப் பொதுக்குழு கூட்டம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்தது. கூட்டத்திற்கு வரதன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயக்குமார் ஆண்டு கணக்குகளையும், கவுரவ செயலாளர் அழகுமுனி ஆண்டு அறிக்கையும் சமர்பித்தனர்.தொடர்ந்து 2025----27ம் ஆண்டுக்கான தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரி செல்வராஜ் அறிவித்தார். புதிய நிர்வாகிகளாக தலைவர் அழகுமுனி, கவுரவ செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் மதன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை