உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், சின்னதம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் கார்த்தி தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கண்ணன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் தேவி தலைமையில் நர்ஸ்கள் ராஜேஸ்வரி, கீதா, சினேகா, கற்பக ஜோதி ஆகியோர் 127 பேருக்கு பரிசோதனை செய்தனர். இதில் 58 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ