உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமங்கலம் பகுதியில் நிரம்பும் கண்மாய்கள்: தினமலர் செய்தி எதிரொலி

திருமங்கலம் பகுதியில் நிரம்பும் கண்மாய்கள்: தினமலர் செய்தி எதிரொலி

திருமங்கலம்: தினமலர் செய்தி எதிரொலியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு திருமங்கலம் பகுதி கண்மாய்கள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் கிளை கால்வாய் வழியாக திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு போதிய அளவு தண்ணீர் இருந்தும் திறந்து விடப்படாததால் திருமங்கலம்பகுதியில் உள்ள 26 கண்மாய்களுக்கு மேல் நிரம்பாமல் இருந்தன. இதில் பாதிக்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டு கிடந்தன.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் 'பற்றாக்குறையாக திறக்கப்பட்ட தண்ணீர் கண்மாய்கள் நிரம்புவது சந்தேகம்தான்' என்ற தலைப்பில் மீண்டும் ஜன., 9ல் செய்து வெளியிடப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் பிரதான கால்வாயில் கிளை கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மேல உரப்பனுார், கரடிக்கல், செட்டிகுளம், ஊராண்ட உரப்பனுார் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. மற்ற கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் திருமங்கலம்பிரதான கால்வாயில் கிளை கால்வாய்கள் ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டன. ஆனால் கரடிக்கல் அருகே உள்ள பெட்ரோல் பங்க் வரை மட்டுமே கட்டப்பட்டுஉள்ளன. அதையடுத்து 100 மீட்டர் துாரத்திற்கு பழைய கால்வாய்கள் உள்ளன. அதன் பின்னர் கால்வாய்கள் இல்லாததால் தண்ணீர் வயல்வெளிகள், காலியிடங்களில் பாய்ந்து வீணாகின்றன. எனவே திருமங்கலத்தின் அனைத்து பகுதி கண்மாய்களையும் இணைக்கும் வகையில் முழுமையாக கால்வாய்களை கட்ட வேண்டும்.விவசாயி சாமிநாதன்: திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டாலும் இறுதி கட்ட விவசாய பணிகளில் உள்ளவர்களுக்கு உதவும். கால்நடை வளர்ப்போருக்கும் உதவும். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை