உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மயங்கி விழுந்த நாய்கள் பலி

மயங்கி விழுந்த நாய்கள் பலி

திருமங்கலம்: திருமங்கலம் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இந்த நாய்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என இரண்டு வாரங்களுக்கு முன்பு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் சோழவந்தான் ரோடு மொக்கையன் அம்பலம் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து 5 நாய்கள் மயங்கி விழுந்தன. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் நாய்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இருந்தும் மூன்று நாய்கள் துடிதுடித்து இறந்தன. மற்ற நாய்கள் திருமங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இறந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி