காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் தவிப்பு
பேரையூர்: சாப்டூர், அத்திபட்டி, குடிச்சேரி, டி.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பயிர்களை காட்டுப் பன்றிகள் அழித்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.சோளம், மக்காச்சோளம், பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்கள் கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. காட்டுப் பன்றிகள் உணவிற்காக இப்பயிர்களை வேட்டையாடி வருகின்றன. காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கு தடை உள்ள நிலையில் பயிர்களை அழிக்கும் இவைகளை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.